திருக்குறள்

724.

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

திருக்குறள் 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.